கே.கே.நகர் பகுதி கிளையில் கடைசி 10 நாட்கள், லைலத்துர் கத்ர் இரவை தேடும் நோக்கத்தில் பல அமல்கள் செய்யப்பட்டது. அதன் விவரம் வருமாறு.
- இதில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அனைவருக்கும் 9 நாட்களும் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உணவழிக்கபட்டது.
- 2:30 மணி முதல் 3:30 மணி வரை இரவு தொழுகை நடைபெற்றது.
- நோன்பு 21 முதல் 26 வரை சகோதரர் மனாஸ் அவர்கள் "நபிகள் நாயகத்தின் வரலாறு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
- நோன்பு 23 முதல் 26 வரை சகோதரர் தவ்ஃபீக் தலைமையில் துஆக்கள் மனனம் செய்யப்பட்டது.
- நோன்பு 22 முதல் 24 வரை சகோதரர் தவ்ஃபீக் மற்றும் மனாஸ் தலைமையில் ஹதீஸ் மற்றும் குரானின் குறிப்பிட்ட வசனங்களை மக்களை படிக்கவைத்து அதனை விளக்கும் படி சொல்லி அதில் தெளிவு பெரும் விதமாக கேள்வி கேட்க பட்டது.
- நோன்பு 23 முதல் 29 வரை குரான் ஓத தெரியாதவருக்கு அடிப்படையில் குரானை எளிதில் ஓத சகோதரர் தவ்ஃபீக் அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. குரான் ஓத தெரிந்தவர்களுக்கு குறைகள் சரி செய்யும் விதமாக சகோதரர் மனாஸ் அவர்களால் உச்சரிப்பு சரி செய்யப்பட்டது.
- நோன்பு 29 அன்று கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
- நோன்பு 27 & 29 அன்று ஆண்களை 5 குழுக்களாகவும் பெண்களை 6 குழுக்களாகவும் பிரித்து QUIZ (கேள்வி பதில்) நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் மார்க்கம் சம்மந்தமான கேள்விகள் கேட்க சகோதர சகோதிரிகள் ஆர்வத்துடன் பதில் அழித்தனர்.
- இரு தரப்பிலும் முதல் இடத்தை பிடித்த குழுவின் தலா 6 பேருக்கு துஆக்கள் தொகுப்பும், இரண்டாம் இடத்தை பிடித்த தலா 6 பேருக்கு மனனம் செய்வோம் புத்தகமும் பரிசாக வழங்க பட்டது. சிறப்பு பரிசாக ஒருவருக்கு திருகுரான் பரிசாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment